பிரேசில் விமான விபத்து : ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் மரணம்
தெற்கு பிரேசிலின் கிராமடோவில்(southern Brazil - Gramado) இடம்பெற்ற விமான விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் 12க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
இரட்டை எஞ்சின் பைபர் பிஏ-42-1000 கொண்ட சிறிய ரக விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் நகரின் மையத்தில் உள்ள கடை ஒன்றில் விழுந்து நொறுங்கியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உயிரிழப்பு
மேலும், இந்த விபத்தில் உயிரிழந்த 10 பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் விபத்தின் மூலம் பரவிய தீயினால் ஏற்பட்ட புகையை சுவாசித்ததன் காரணமாக மேலும் பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் தரையில் இருந்த 17 பேர் காயமடைந்ததாகவும், அவர்களில் 12 பேர் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
எனினும் விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
61 வயதான கலேஸ்ஸி(Galeazzi), அவரது மனைவி, அவர்களின் மூன்று மகள்கள், பல குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஒரு ஊழியருடன் மேற்கொண்ட பயணத்திலே மேற்படி விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |