கிராம உத்தியோகத்தர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் : முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கை

Sri Lankan protests Sri Lanka Election
By Shalini Balachandran Aug 12, 2024 10:24 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான அனைத்து கடமைகளையும் எந்தவித தடையுமின்றி செய்வதற்கு கிராம உத்தியோகத்தர்கள் கூட்டமைப்பு இதற்கு முன்னர் இணக்கம் தெரிவித்திருந்த நிலையில், அந்த விடயம் குறித்து அவர்களுடன் மீண்டும் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறித்த விடயத்தை கிராம உத்தியோகத்தர்களின் தொழிற்சங்க நடவடிக்கையினால் தேர்தலுக்கு பாதிப்பு ஏற்படுமா என தேர்தல் ஆணைக்குழு தலைவர் ரத்நாயக்கவிடம் (R.M.A.L. Rathnayake ) வினவிய போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, கிராம உத்தியோகத்தர்கள் அனைத்து செயற்பாடுகளிலிருந்தும் இன்று (12) மற்றும் நாளை (13) விலகியிருப்பதுடன் தொடர் எதிர்ப்பு நடவடிக்கைக்கான வாரமாக இந்த வாரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

கிராம உத்தியோகத்தர் சேவை

இந்தநிலையில், வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ள கிராம உத்தியோகத்தர் சேவை யாப்புக்கு தமது கோரிக்கைகள் உள்வாங்கப்படவில்லை என தெரிவித்தே இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அந்த கூட்டமைப்பின் தலைவர் நந்தன ரணசிங்க (Nandana Ranasinghe) தெரிவித்துள்ளார்.

கிராம உத்தியோகத்தர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் : முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கை | Boycott Strike Of Village Officials

மேலும், பொது நிர்வாக அமைச்சுக்கு முன்பாக இன்று (12) அமைதியான முறையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை நடாத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுவில் கையெழுத்திட்ட அனுர!

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுவில் கையெழுத்திட்ட அனுர!

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW