தமது திறமைகளை முன்னிலைப்படுத்தும் பெண்கள்! யூ.எல்.அப்துல் மஜீத்
இன்றைய சூழலில் பெண்கள் தங்கள் திறமைகளை எல்லாத் துறைகளிலும் முன்னிலைப்படுத்தி வருகின்றனர், திறமைகளை அடையாளப்படுத்துவதில் பெண்கள் காட்டி வரும் அர்ப்பணிப்பானது பாராட்டத்தக்கது என தென்கிழக்கு பல்கலைக்கழக பதில் உபவேந்தர் கலாநிதி யூ.எல்.அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.
தென்கிழக்கு பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தின் தமிழ் சங்கம் மற்றும் சமூகவியல் சங்கம் என்பன இணைந்து ஏற்பாடு செய்திருந்த புத்தளம் புழுதிவயல் பைஸானா பைரூஸ் எழுதிய ‘டுவன்டி ப்ளஸ் 20+’ கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு, கலை கலாசார பீடத்தின் கேட்போர் கூடத்தில் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி எம்.எம்.பாஸில் தலைமையில் இடம்பெற்றது.
பிரதம அதிதியின் உரை
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தென்கிழக்கு பல்கலைக்கழக பதில் உபவேந்தர் கலாநிதி யூ.எல்.அப்துல் மஜீத் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் கூறுகையில், தற்போது தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் மட்டுமல்லாது ஏனைய நிறுவனங்களிலும் பெண்களின் பங்கேற்ப்பு அதிகரித்து வருகின்றது. இவர்கள் பல்வேறு துறைகளில் தங்களது திறமைகளை காட்டிவருகின்றனர்.
இந்த வகையில் இலக்கிய துறையில் கலை
கலாச்சார பீட மாணவியான பைஸானா பைரூஸ் ‘டுவன்டி ப்ளஸ் 20+’ என்ற பெயரின் கவிதை
நூல் ஒன்றை எழுதியுள்ளார். இவரது முயற்சியை பாராட்டாமல் இருக்க முடியாது.
இவ்வாறான செயற்பாடுகளில் ஏனைய மாணவர்களும் தங்களது தடங்களைப் பதிக்க வேண்டும்
என கோரிக்கை விடுத்துள்ளார்.