சஜித் தலைமையிலான அரசாங்கம் வந்தால் ஜனாதிபதி மாளிகை பல்கலைக்கழகமாக மாறும் : ஹரீஸ்

Sajith Premadasa Government Of Sri Lanka
By Mayuri Sep 01, 2024 11:28 AM GMT

தனது அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் ஜனாதிபதி மாளிகையை பல்கலைக்கழகமாக மாற்றுவேன் என்கின்ற நல்லெண்ணத்துடன் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் உரையாற்றுகையில், இந்த மண்ணில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினரின் விளையாட்டுகளை எல்லாம் தள்ளி வைத்துவிட்டு பொத்துவில் மண்ணுக்கான நிரந்தர தீர்வை பெற வேண்டுமானால் இந்த மண்ணுடைய தாகமாக இருக்கின்ற பொத்துவில் வலய கல்வி பணிமனையை ஜனாதிபதியாக மாறுகின்ற பொழுது சஜித் பிரேமதாச நிச்சயமாக உருவாக்கி தருவார் என குறிப்பிட்டுள்ளார். 

GalleryGallery