இலங்கை வந்துள்ள ஷிஆ முஸ்லிம்கள்!

Sri Lanka Iran Mosque
By Rakshana MA Jun 29, 2025 08:16 AM GMT
Rakshana MA

Rakshana MA

கொழும்பில் ஷிஆ - வோரா சமுதாயத்தின் மத நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிகழ்வானது, ஜூன் 25 முதல் ஜூலை 2 வரை, கொழும்பு பம்பலப்பிட்டியாவில் அமைந்துள்ள வோரா பள்ளிவாசலில் இடம்பெறும்.

இதில், வோரா (Bohra) சமுதாயத்தின் வருடாந்த மத வழிபாடு, மார்க்க சொற்பொழிவுகள் மற்றும் கலாச்சார சர்வதேச மாநாடு நடைபெற்று வருகிறது.

ஈரான் மீண்டும் அணுசக்தி பாதையில்.. IAEA எச்சரிக்கையில் அதிர்ச்சியூட்டும் தகவல்!

ஈரான் மீண்டும் அணுசக்தி பாதையில்.. IAEA எச்சரிக்கையில் அதிர்ச்சியூட்டும் தகவல்!

கலாச்சார மாநாடு

இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா, பாகிஸ்தான், லண்டன், கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து 9,000க்கும் மேற்பட்ட வோரா சமுதாயத்தினர் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

இலங்கை வந்துள்ள ஷிஆ முஸ்லிம்கள்! | Bohra Community Religious Event In Colombo

மாநாட்டிற்காக, வோரா சமுதாயத்தின் உயரிய மதத் தலைவர் நேரடியாக கொழும்பில் தங்கி நிகழ்வுகளை வழிநடத்தி வருகிறார்.

வோரா சமூகத்தை சேர்ந்தவர்கள் பெரும்பாலும் குஜராத்தும் பாகிஸ்தானும் போன்ற நாடுகளில் வர்த்தகத்துறையில் ஈடுபட்டவர்கள்.

இச்சமுதாயத்தினர் இலங்கையிலும், குறிப்பாக கொழும்பில் மட்டுமே 1 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் வாழ்ந்து வருகின்றனர்.

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி குறித்து வெளியான அறிவிப்பு

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி குறித்து வெளியான அறிவிப்பு

சுற்றுலாத்துறையின் வருமானம் 

பம்பலப்பிட்டி மெரைன் டிரைவ் வீதியில், இவர்களுக்கென தனிப்பட்ட பள்ளிவாசலும் கல்வி நிலையமும் உள்ளது.

இந்த நிகழ்வின் காரணமாக, கொழும்பில் உள்ள பெரும்பாலான சுற்றுலா ஹோட்டல்கள் முழுமையாக முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

இலங்கை வந்துள்ள ஷிஆ முஸ்லிம்கள்! | Bohra Community Religious Event In Colombo

இதன் வாயிலாக இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு மற்றும் அந்நியச் செலாவணியில் கணிசமான வருமானம் கிடைத்துவருகிறது.

மேலும், இந்த மாநாட்டிற்கான ஒழுங்கமைப்பில் அரசாங்கமும் முழுமையாகச் செயல்பட்டு வருகின்றது. அதற்கான ஆதரவுகளாக, பாதுகாப்பு , போக்குவரத்து, வாடகை வாகன வசதிகள், மின் மற்றும் நீர் விநியோகம், உணவுப் பரிமாறல் இவை அனைத்தும் திறம்பட வழங்கப்பட்டு வருவதால், இந்த மாநாடு மிகவும் ஒழுங்காகவும் அமைதியாகவும் நடைபெறுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா - ஈரான் மோதல் மீண்டும் தீவிரம்! ட்ரம்ப் எச்சரிக்கை

அமெரிக்கா - ஈரான் மோதல் மீண்டும் தீவிரம்! ட்ரம்ப் எச்சரிக்கை

நிந்தவூரில் பராமரிப்பின்றி காணப்படும் பேருந்து நிறுத்த நிழல்குடை: பயணிகள் அசௌகரியம்

நிந்தவூரில் பராமரிப்பின்றி காணப்படும் பேருந்து நிறுத்த நிழல்குடை: பயணிகள் அசௌகரியம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW