மருதானையில் அடையாளம் காணப்படாத நபரின் சடலம் மீட்பு

Sri Lanka Police Maradana
By Faarika Faizal Oct 22, 2025 04:45 AM GMT
Faarika Faizal

Faarika Faizal

மருதானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேர வாவியில் அடையாளம் தெரியாத நபரின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, நேற்று(21.10.2025) மாலை இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், உயிரிழந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

நூற்றுக்கு மேற்பட்ட குற்றவாளிகளை தப்பிக்கச் செய்த ஜே.கே பாய்

நூற்றுக்கு மேற்பட்ட குற்றவாளிகளை தப்பிக்கச் செய்த ஜே.கே பாய்

மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகிறது 

மேலும், 55 முதல் 60 வயதுக்குட்பட்ட ஆண் எனவும், அவர் கறுப்பு நிற காற்சட்டை மற்றும் பச்சை நிற நீண்ட கை சட்டை அணிந்திருப்பதாக பொலிஸார் அடையாளப்படுத்தியுள்ளனர்.

மருதானையில் அடையாளம் காணப்படாத நபரின் சடலம் மீட்பு | Body Recovered From Maradana Pera Lake

அந்நிலையில், பிரேத பரிசோதனைக்குப் பின்னர், உடல் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சம்பவம் தொடர்பில், மருதானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



You May Like This Video...

 

ட்ரம்ப்பின் நீண்ட நாள் ஆசை : இடிக்கப்பட்டது வெள்ளை மாளிகையின் ஒரு பகுதி

ட்ரம்ப்பின் நீண்ட நாள் ஆசை : இடிக்கப்பட்டது வெள்ளை மாளிகையின் ஒரு பகுதி

கையெழுத்திடாவிட்டால் 155 சதவீதம் வரி : சீனாவை எச்சரிக்கும் ட்ரம்ப்

கையெழுத்திடாவிட்டால் 155 சதவீதம் வரி : சீனாவை எச்சரிக்கும் ட்ரம்ப்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW