மாவடிப்பள்ளி ஆற்றில் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு
காரைதீவு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாவடிப்பள்ளி ஆற்றில் இன்று (03) குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலமானது, காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக காலைதீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
53 வயது மதிக்கத்தக்க மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி பகுதியை சேர்ந்த பாக்கியராசா கிருபாகரன் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
முதற்கட்ட விசாரணை
சடலமாக மீட்கப்பட்ட குறித்த குடும்பஸ்தரின் கழுத்து மற்றும் தலை தோற்பட்டை உள்ளிட்ட பகுதில் காயங்கள் காணப்படுவதாக ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
அதேவேளை, மாவடிப்பள்ளி பகுதியில் உள்ள அரிசி ஆலை ஒன்றில் தொழிலாளியாக இருந்ததுடன் நேற்று முதல் காணாமல் போனதாக அரிசி ஆலை உரிமையாளர் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையின் போது கூறியுள்ளார்.
மேலும் சம்பவ இடத்திற்கு கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸார் சென்று மேற்பார்வை இட்டதுடன், விசாரணைகளை துரிதப்படுத்தமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
மக்களின் ஒத்துழைப்பு
இதேவேளை இலவச ஜனாசா சேவைகளை மேற்கொள்ளும் சாய்ந்தமருது ஜனாசா நலன்புரி மக்கள் பேரவை உறுப்பினர்களும் சம்பவ இடத்திற்கு வருகை தந்து தங்களது ஒத்துழைப்பினை உரிய தரப்பினருக்கு வழங்கி வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பில் அம்பாறை தடயவியல் பொலிஸார் ஸ்தலத்திற்கு வருகை தந்து மோப்ப நாய் உதவிகளுடன் சந்தேக நபர்கள் தடயங்கள் குறித்து விசாரணைகளை காரைதீவு பொலிஸாருடன் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |