திருமலையில் கூரிய வாள்களுடன் 19 சந்தேக நபர்கள் கைது

Sri Lanka Police Sri Lankan Peoples Eastern Province Crime
By Rakshana MA Aug 03, 2025 05:31 AM GMT

திருயேகாணமலை - மூதூர் பகுதியில் கூரிய வாள்கள், ஐஸ் போதைப் பொருட்களுடன் 19 சந்தேக நபர்கள் மூதூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையானது, நேற்று (02) மாலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சந்தேகத்திற்கிடமான முறையில் மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள தோப்பூர் பிரதேசத்தில் ஒரு குழுவினர் ஒன்று கூடியுள்ளதாக மூதூர் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

சம்மாந்துறையில் லொரி விபத்து

சம்மாந்துறையில் லொரி விபத்து

சந்தேக நபர்கள் கைது 

தகவலின் பிரகாரம் மூதூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் ஆலோசனைக்கமைவாக பொலிஸ் குழுவினர் குறித்த வீட்டினை முற்றுகையிட்டனர்.

இதன்போது 19 பேர் கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடமிருந்து 4 கூரிய வாள்கள், இரண்டு ஐஸ் போதைப் பொருள் பக்கெட்டுக்களும் மீட்கப்பட்டுள்ளன.

திருமலையில் கூரிய வாள்களுடன் 19 சந்தேக நபர்கள் கைது | 19 Arrested With Ice Drugs Swords In Mutur

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஈச்சிலம்பற்று, தோப்பூர், மூதூர், பச்சநூர் பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் மூதூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டதுடன், இவர்களை மூதூர் நீதிவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாலஸ்தீனம் தொடர்பில் ஹமாஸ் வெளியிட்ட அறிவிப்பு

பாலஸ்தீனம் தொடர்பில் ஹமாஸ் வெளியிட்ட அறிவிப்பு

முஸ்லிம்களின் ஆன்மீக வலிமையின் ரகசியம்

முஸ்லிம்களின் ஆன்மீக வலிமையின் ரகசியம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW