மட்டக்களப்பில் காணாமலான நபர் சடலமாக மீட்பு
Sri Lanka Police
Batticaloa
Death
By Rakshana MA
மட்டக்களப்பு - கல்லடி புனித அந்தோனியார் ஆலயத்திற்கு அருகாமையில், இன்று (03) காலை ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு கிரான்குளம் பகுதியை சேர்ந்த ஐயாத்துரை பத்மநாதன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலம் மீட்பு
கூலித்தொழிலாளியாகிய குறித்த நபர் வேலைக்கு சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த நபர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

