சிறந்த முன்மாதிரி போட்டியில் முதலிடம் பெற்ற சாய்ந்தமருது அரசினர் பாடசாலை
கல்முனை கல்வி வலய மட்டத்தில் 2024-12-24 ஆம் திகதி நடைபெற்ற பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்படும் "சிறந்த முன்மாதிரி" (Best Practices Competition -2024) போட்டியில் கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை (ஜீ.எம்.எம்.எஸ்) முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டது.
இதற்கான சான்றிதழும் வெற்றிக் கிண்ணமும் நேற்று (17) கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் நடைபெற்ற கணக்காய்வு முகாமைத்துவ கூட்டத்தை தொடர்ந்து வழங்கப்பட்டுள்ளது.
போட்டியில் முதலிடம்
கல்முனை வலயக் கல்வி அலுவலக கல்வி அபிவிருத்திக்கான பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எச்.றியாஸாவின் நெறிப்படுத்தலில் வலய கணக்காளர் கே.லிங்கேஸ்வரனின் பங்குபற்றுதலுடன் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.எஸ்.நஜீம் தலைமையில் கிழக்கு மாகாண கணக்காய்வு அத்தியட்சகர் ஏ.நிஸாமினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த சாதனைக்காக அனைவரும் பாடசாலை சமூகத்தை பாராட்டியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

