முள்ளிப்பொத்தானை காட்டுப்பகுதிக்குள் காயங்களுடன் மீட்கப்பட்ட கரடி
முள்ளிப்பொத்தானை(Mullippoththanai) காட்டுப்பகுதிக்குள் காயங்களுடன் கரடி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
தம்பலகாமம் முள்ளிப்பொத்தானை சின்னக்குளத்துக்கு அருகில் உள்ள காட்டுப்பகுதியில் இன்று (12) பொறியில் சிக்கி நிலையில் காயமடைந்த கரடியை கந்தளாய் வனவிலங்கு அதிகாரிகள் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட கரடி
குறித்த காட்டுப்பகுதிக்குள் விறகு வெட்டச் சென்ற கிராமவாசி ஒருவரால், கரடி ஒன்று வலியால் அலறுவதைக் கேட்டு சந்தேகம் அடைந்த நிலையில், உடனடியாக கந்தளாய் வனவிலங்கு அதிகாரிகளுக்குத் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
விரைந்து செயற்பட்ட கந்தளாய் வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் கிரித்தளை மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று காயமடைந்த கரடிக்கு முதலுதவி அளித்துள்ளனர்.
இதன்போது கரடியின் கழுத்து மற்றும் முகத்தில் காயங்கள் ஏற்பட்டிருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பின்னர், காயமடைந்த கரடிக்கு சிகிச்சையளிக்கப்பட்டு தம்பலகாமம் கடற்படை காப்பகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது என்று கிரித்தளை மருத்துவர் குழு தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |




