முன்னாள் அமைச்சர் பஷீர் ரணிலிடம் முன்வைத்துள்ள முன்னோடி வேலைத்திட்டம்

Batticaloa Ranil Wickremesinghe Tourism
By Laksi Aug 26, 2024 01:26 PM GMT
Laksi

Laksi

உற்பத்தி திறன் ஊக்குவிப்பு முன்னாள் அமைச்சரும், புத்திஜீவியுமான பஷீர் சேகுதாவுத் தேசிய நல்லிணக்கத்துக்கான முன்னோடி வேலைத்திட்டம் ஒன்றை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் முன்வைத்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்துக்கு கடந்த வாரம் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் பாசிக்குடாவில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் வைத்து பஷீர் சேகுதாவூத் நல்லெண்ண சந்திப்பு மேற்கொண்டிருந்தார்.

இதன்போது, அனுராதபுரத்தை பிரதான தலைமை நகரமாக மையப்படுத்தி இலங்கையில் உள்ள உலர் வலய பிரதேசங்களுக்கு இடையிலான இணைப்பு பாலமாக கடலோர புகையிரத திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான நிபுணத்துவ ஆலோசனையை ஜனாதிபதியிடம் அவர் முன்வைத்தார்.

அனுரவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு

அனுரவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு

நிரந்தர சமாதானம்

அத்தோடு, உலர் வலய பிரதேசங்களுக்கு இடையிலான இணைப்பு பாலமாக கடலோர புகையிரத திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் சமூக - பொருளாதார மேம்பாடு, சுற்று சூழல் பாதுகாப்பு, இயற்கையோடு இணைந்த வாழ்வியல், சமூக நல்லிணக்கம் ஆகியவற்றை நிலைநாட்டவும், கட்டியெழுப்பவும் முடியும் என்று பஷீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் பஷீர் ரணிலிடம் முன்வைத்துள்ள முன்னோடி வேலைத்திட்டம் | Bashir Sekhudaud Meet For Ranil In Batti

வரலாற்று முக்கியத்துவமும், கலாசார பாரம்பரிய பெருமையும், ஆன்மீக மகிமையும், சகவாழ்வின் மேன்மையும், நிறைந்த அனுராதபுரத்தை தலைமை நகரமாக கொண்டு இவ்வேலை திட்டம் முன்னெடுப்படுவதை நாட்டின் எல்லா இன மக்களும் நிரந்தர சமாதானம், நீடித்த அபிவிருத்தி ஆகியவற்றுக்கான திறவுகோலாக பார்ப்பார்கள் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அம்பாறையில் தேசிய மக்கள் சக்தியினரால் துண்டுப் பிரசுரம் விநியோகம்

அம்பாறையில் தேசிய மக்கள் சக்தியினரால் துண்டுப் பிரசுரம் விநியோகம்

சுற்றுலா துறை

வனஜீவராசிகளின் இயற்கை சரணாலயமாக விளங்குகின்ற உலர் வலயத்தை மையப்படுத்திய இவ்வேலை திட்டம் மூலம் சுற்றுலா துறையை மேம்படுத்த முடிவதுடன் மேல் மாகாணத்துக்கும், உலர் வலயத்துக்கு இடையில் நிலவி வருகின்ற பொருளாதார ஏற்றத் தாழ்வுகளைக் களைய முடியும் என்பதும் இவருடைய வேலை திட்டத்தின் முக்கிய அம்சம் ஆகும்.

முன்னாள் அமைச்சர் பஷீர் ரணிலிடம் முன்வைத்துள்ள முன்னோடி வேலைத்திட்டம் | Bashir Sekhudaud Meet For Ranil In Batti

வடக்கு, கிழக்கு, மலையகம் ஆகியவற்றுக்கு ஊவா மாகாணத்தில் பதுளையில் அமைந்துள்ள அப்புத்தளை நகரத்தில் இருந்து சுற்று சூழலுக்கு உகந்த வகையில் புகையிரத பாதைகள் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்கிற இவரின் வேலை திட்டம் உண்மையிலேயே தூர நோக்கு உடையது என்று ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW