பங்களாதேஷ் முன்னாள் பிரதமரின் கடவுச்சீட்டு இரத்து
பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அனைத்து தூதரக கடவுச்சீட்டையும் அந்நாட்டு இடைக்கால அரசு நிர்வாகம் இரத்துச் செய்வதாக அறிவித்துள்ளது.
அத்தோடு,அவரது அமைச்சரவையில் இருந்த முன்னாள் எம்.பி.க்கள் அனைவரின் கடவுச்சீட்டுக்களும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடவுச்சீட்டு இரத்து
பங்களாதேசில் மாணவர்கள் இட ஒதுக்கீடு உத்தரவை எதிர்த்து செய்த போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில் பிரதமர் பதவியை விட்டு விலகிய ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.அங்கு முகமது யூனுஷ் தலைமையில் இடைக்கால அரசு ஆட்சி அமைத்துள்ளது.
இந்நிலையில், ஹசீனாவின் அனைத்து தூதரக கடவுச்சீட்டுக்களையும், அந்நாட்டு இடைக்கால அரசு இரத்து செய்துள்ளமையால் வேறு நாட்டிற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |