தேர்தல் பிரசாரம் தொடர்பில் பொலிஸாருக்கு விதிக்கப்பட்டுள்ள உத்தரவு

Sri Lanka Police Election Commission of Sri Lanka Election Sri Lanka Presidential Election 2024
By Laksi Sep 04, 2024 03:08 PM GMT
Laksi

Laksi

 வீடு வீடாகச் சென்று தேர்தல் பிரசாரம் செய்வதை தடுக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த உத்தரவானது இன்று (4) தேர்தல் ஆணைக்குழுவினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, இதுபோன்ற பிரசாரங்கள் செய்வதைத் தடுக்க பொலிஸார் நடமாடும் ரோந்துப் பணியை அதிகரிக்கவும் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

அம்பாறையில் வைத்திய அதிகாரிகளால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு

அம்பாறையில் வைத்திய அதிகாரிகளால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு

தேர்தல் ஆணைக்குழு 

குறிப்பிட்ட சில அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் வீடு வீடாக சென்று வருவதாக ஏராளமான புகார்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் பிரசாரம் தொடர்பில் பொலிஸாருக்கு விதிக்கப்பட்டுள்ள உத்தரவு | Ban On Home Distribution Of Election Leaflets

இதுபோன்ற செயல்கள் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கு இடையூறாக இருப்பதாக ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதேவேளை, சட்டவிரோதமான முறையில் நடத்தப்படும் தேர்தல் அலுவலகங்கள் தொடர்பில் சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு தேர்தல் ஆணைக்குழு பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளது.

தேசிய மக்கள் சக்தி வெற்றியீட்டினால் கோட்டாபயவின் யுகமே ஏற்படும்: ரிஷாட் பகிரங்கம்

தேசிய மக்கள் சக்தி வெற்றியீட்டினால் கோட்டாபயவின் யுகமே ஏற்படும்: ரிஷாட் பகிரங்கம்

அனைத்து முஸ்லிம்களும் சஜித்திற்கு வாக்களிக்க முன்வர வேண்டும்: தேசகீர்த்தி ஏ.அப்துல் கபூர் தெரிவிப்பு

அனைத்து முஸ்லிம்களும் சஜித்திற்கு வாக்களிக்க முன்வர வேண்டும்: தேசகீர்த்தி ஏ.அப்துல் கபூர் தெரிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW