தேர்தல் பிரச்சாரம் தொடர்பில் ஆணைக்குழுவின் அறிவிப்பு
தேர்தல் துண்டுப் பிரசுரங்களை வீடு வீடாக விநியோகிப்பதற்காக ஊர்வலங்களில் மக்கள் செல்வது தடை செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
குறித்த நடைமுறையை பின்பற்றாதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கும் போது இசைக்கருவிகள் மற்றும் காட்சிப் பலகைகளை பயன்படுத்தக் கூடாது எனவும் `குறிப்பிடப்பட்டுள்ளது.
தடை விதிப்பு
அத்தோடு, தேர்தல் காலத்தில் அரசியல் செய்திகள் மற்றும் கட்டுரைகள், விளம்பரங்கள் போன்றவற்றை அரச அல்லது அரச நிறுவனங்களின் செலவில் வெளியிடக்கூடாது எனவும் அனைத்துக் கட்சிகளுக்கும் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தேர்தல் பிரசாரங்களுக்கு அரசு அதிகாரிகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பள்ளிகள், அரசு அலுவலகங்கள் போன்ற எந்த ஒரு நிறுவனத்திலும் வாக்கு கேட்கவோ, துண்டு பிரசுரங்களை விநியோகிக்கவோ, விளம்பர பலகைகளையோ அல்லது விளம்பரங்களையோ காட்டவோ கூடாது என்று ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |