ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு முக்கிய எச்சரிக்கை

Election Commission of Sri Lanka Sri Lanka Sri Lanka Presidential Election 2024
By Laksi Aug 27, 2024 09:30 AM GMT
Laksi

Laksi

ஜனாதிபதி வேட்பாளர்கள் மக்களுக்கு விருந்துபசாரங்களை நடத்துவது ஜனாதிபதி தேர்தல் சட்டத்தின்படி குற்றச் செயல் என தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடு, அவர்கள் அவ்வாறு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் அதிகாரி ஒருவர் நேற்று (26) தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில், அரசியல் வேட்பாளர்கள் பிரசார நடவடிக்கையின் ஒரு பகுதியாக தங்கள் ஆதரவாளர்களுக்காக அடிக்கடி விருந்துகளை நடத்துவது வழக்கமாக இருந்தது, எனினும் அப்போது இந்த நடைமுறை பரவலாக விவாதிக்கப்படாமல் அல்லது குறிப்பிடத்தக்க பிரச்சினையாக கருதப்படாமல் இருந்தது.

விசேட தேவையுடையவர்களுக்கு தேர்தல் ஆணைக்குழுவின் முக்கிய அறிவிப்பு

விசேட தேவையுடையவர்களுக்கு தேர்தல் ஆணைக்குழுவின் முக்கிய அறிவிப்பு

விருந்துபசாரங்களுக்கு தடை

எனினும், அனுராதபுரத்தில் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரால் அப்பகுதியிலுள்ள கல்வியாளர்கள் மற்றும் தொழில் நிபுணர்களுக்காக நடத்தப்படவிருந்த விருந்தொன்றை தேர்தல் அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதையடுத்து புதிய விவாதம் எழுந்துள்ளது.

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு முக்கிய எச்சரிக்கை | Ban On Holding Parties For Presidential Candidates

இந்த விடயம் தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் சிந்தக குலரத்ன ஊடகமொன்றிற்கு கருத்துத் தெரிவிக்கையில், “ஜனாதிபதித் தேர்தல் சட்டத்தின் பிரகாரம் இவ்வாறான செயற்பாடுகள் தூண்டுதலாக அமையும் எனவும், எனவே தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இது போன்ற விடயங்களை முன்னெடுப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

தேர்தல்கள் சட்டத்தின் 77வது பிரிவின்படி விருந்துபசரிப்புகள் அளிப்பது குற்றமாகும். வேட்பாளர்கள் தமது ஆதரவாளர்களுக்கு உணவு, பானம், குளிர்பானங்கள் அல்லது பரிசுகளை வழங்கக்கூடாது.” என தெரிவித்துள்ளார்.

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு

காத்தான்குடியில் 23 பேர் கைது

காத்தான்குடியில் 23 பேர் கைது

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW