ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசார பணிகளுக்கு நாளை நள்ளிரவுடன் தடை

Election Commission of Sri Lanka Sri Lanka
By Laksi Sep 17, 2024 06:42 AM GMT
Laksi

Laksi

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான கட்சிகளின் பிரசார பணிகளுக்கு நாளை நள்ளிரவுடன் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை  தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அத்தோடு, நாளை நள்ளிரவுக்குப் பின்னர் தேர்தல் பிரசாரம், பேரணி, துண்டுப் பிரசுர விநியோகம் மற்றும் வேட்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ஏதேனும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றவர்கள் தொடர்பில் விசேட கவனஞ்செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வாக்குப்பெட்டி தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் அறிவிப்பு

வாக்குப்பெட்டி தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் அறிவிப்பு

சட்ட நடவடிக்கை

அதன்படி, இந்த நடைமுறையை பின்பற்றாதவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு அறிவித்துள்ளதாக சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசார பணிகளுக்கு நாளை நள்ளிரவுடன் தடை | Ban On Election Campaign From Sep 18 Midnight

ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சம்மாந்துறையில் வீடொன்றில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் உயிரிழப்பு

சம்மாந்துறையில் வீடொன்றில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் உயிரிழப்பு

வாக்காளர் அட்டைகள் கிடைக்கப் பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

வாக்காளர் அட்டைகள் கிடைக்கப் பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW