வாக்காளர் அட்டைகள் கிடைக்கப் பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

Election Commission of Sri Lanka Election Sri Lanka Presidential Election 2024
By Mayuri Sep 17, 2024 02:22 AM GMT

இதுவரையில் உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டைகள் கிடைக்கப் பெறாதவர்கள், அருகில் உள்ள அஞ்சல் அலுவலகங்களில் அவற்றைப் பெற்றுக் கொள்ள முடியும் என பிரதி அஞ்சல் மா அதிபர் ராஜித கே.ரணசிங்க அறிவித்துள்ளார்.

குறித்த வாக்காளர் அட்டைகளை, எதிர்வரும் 18, 19, 20 மற்றும் 21ஆம் திகதிகளில் பெற்றுக்கொள்ள முடியுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலுக்கான உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டை

இதேவேளை ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டைகளில் 98 சதவீதமானவை விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் அட்டைகள் கிடைக்கப் பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு | 98 Voter Card Distribution Complete

ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் கடந்த 3 ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை வீடுகளுக்கு சென்று விநியோகிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW