தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள முக்கிய எச்சரிக்கை
Election Commission of Sri Lanka
General Election 2024
Parliament Election 2024
By Laksi
நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் தனிப்பட்ட வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஜோதிட கணிப்புகளை செய்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறித்த நடைமுறையை பின்பற்றுமாறு அனைத்து ஜோதிடர்களுக்கும் தேர்தல் ஆணையம் அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.
அத்தோடு, இதுபோன்ற கணிப்புகளை வெளியிடுவது தேர்தல் சட்டப்படி கடுமையான குற்றமாகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வழக்கு
இவ்வாறான கணிப்புகளை வெளியிடுவோருக்கு எதிராக வழக்குத் தொடரப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |