கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

By Mayuri Oct 17, 2024 06:21 AM GMT

முல்லைத்தீவிலிருந்து காங்கேசன்துறை ஊடாக மன்னார் வரையான கடற்பரப்புகளில் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் மழைபெய்யக்கூடும்.

கடற்பரப்பில் மழை நிலைமை

அத்துடன், மன்னாரிலிருந்து காங்கேசன்துறை வரையான கடற்பரப்புகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை பெய்யக்கூடும்.

கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Weather Alert In Sri Lanka

சிலாபத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான பகுதிகளில் கடல் சற்று கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW