200 வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் உரிமங்கள் தடை
பல்வேறு முறைகேடுகள் காரணமாக 200 வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் உரிமங்கள் தடை செய்யப்பட்டு மேலும் 400 நிறுவனங்களின் உரிமங்கள் இடைநிறுத்தப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை, அமைச்சர் மனுஷ நாணயக்கார நேற்று (23) பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போது குறிப்பிட்டுள்ளார்.
கேகாலை மாவட்ட சபை உறுப்பினர் ராஜிகா விக்ரமசிங்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் குறித்த தகவலை தெரிவித்துள்ளார்.
வீட்டு வேலை
அத்தோடு, 2019 ஆம் ஆண்டு முதல் 464,132 பெண் தொழிலாளர்கள் வெளிநாடு சென்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவர்களில் மூன்று லட்சத்து 1188 வீட்டு வேலைக்காகவும் மற்றும் ஏனைய ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 944 பேர் வேறு வேலைகளுக்காகவும் சென்றுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், இவர்களில் மூன்று லட்சத்து 62904 பேர் பயிற்றப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் ஒரு லட்சத்து199 பேர் பயிற்றப்படாத தொழிலாளர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |