நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Sri Lanka Climate Change Weather
By Laksi Oct 16, 2024 06:37 AM GMT
Laksi

Laksi

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக வெள்ள நீர் வடிந்து செல்வதால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் சந்துன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அத்தோடு, வயிற்றுப்போக்கு, எலிக்காய்ச்சல் மற்றும் புழு நோய்கள் போன்ற அறிகுறிகள் காணப்பட்டால், கூடிய விரைவில் மருத்துவ சிகிச்சை பெறுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த நாட்களில் நீங்கள் சாப்பிடும் உணவு சுத்தமாகவும், புதியதாகவும் இருக்க வேண்டும். உணவு சூடாக தயாரிக்கப்படுவதையும் உறுதிப்படுத்த வேண்டும்.

இணையவழி பண மோசடி : பல வெளிநாட்டு பிரஜைகள் கைது

இணையவழி பண மோசடி : பல வெளிநாட்டு பிரஜைகள் கைது

மருத்துவ ஆலோசனை

குறிப்பாக, தண்ணீரை சுட வைத்துப் பாவனைக்கு எடுத்துக் கொள்ளுங்கள். அடைக்கப்பட்ட தண்ணீர் போத்தல்கள் என்றால் அவற்றின் தரம் குறித்து உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Bad Weather Risk Of Spreading Infectious Diseases

இந்த நாட்களில், உங்கள் தோலில் காயம் அல்லது கீறல் இருந்தால், நீங்கள் வெள்ள அனர்த்தத்திற்கு முகங்கொடுத்திருந்தால் எலிக்காய்ச்சலுக்கு ஆளாக நேரிடும் வாய்ப்புக்கள் அதிகம்.

இதனை கவனத்திற் கொண்டு உடனடியாக அதற்கு மருத்துவ ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளுங்கள் என  சந்துன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளுக்கு வழங்கப்பட்ட விடுமுறை தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு

பாடசாலைகளுக்கு வழங்கப்பட்ட விடுமுறை தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு

எதிர்கால திட்டங்கள் குறித்து விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ள ரணில்

எதிர்கால திட்டங்கள் குறித்து விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ள ரணில்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW