நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் மூவர் பலி

Colombo Gampaha Sri Lanka Climate Change Weather
By Laksi Oct 14, 2024 03:51 PM GMT
Laksi

Laksi

கொழும்பு, கம்பஹா உட்பட நாட்டில் 13 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மூவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடு, இந்த சீரற்ற காலநிலை மாற்றம் காரணமாக சுமார் 34,492 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 34 ஆயிரத்து 484 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், தற்போது நிலவும் மழை, வெள்ளத்தால் 240 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளதுடன் 6,963 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

காத்தான்குடி மாணவியால் பிரதமருக்கு மகஜர் கையளிப்பு

காத்தான்குடி மாணவியால் பிரதமருக்கு மகஜர் கையளிப்பு

சீரற்ற காலநிலை

இந்த நிலையில், சீரற்ற காலநிலையால் கொழும்பு, கம்பஹா ஆகிய மாவட்டங்களிலேயே அதிக பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் மூவர் பலி | Bad Weather Kills Three In Sl

அது மாத்திரமன்றி, அம்பாறை மாவட்டத்தில் சில இடங்களில் மழை குறைந்து காற்றுடன் கூடிய காலநிலை காரணமாக மக்களது அன்றாட இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக நாவிதன்வெளி, கல்முனை முஸ்லீம் பிரிவு, தமிழ் உப பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட பிரதான போக்குவரத்துபாதைகள் சில வெள்ளத்தால் மூழ்கியுள்ள நிலையில், அப்பகுதிகளில் உள்ள வடிகான்களை விரைந்து சீர்செய்யுமாறு கல்முனை மாநகர சபையிடம் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நிலவும் சீரற்ற காலநிலை: பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு

நிலவும் சீரற்ற காலநிலை: பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு

மட்டக்களப்பில் கனரக வாகனம் தடம்பு புரண்டு விபத்து: சாரதி படுகாயம்

மட்டக்களப்பில் கனரக வாகனம் தடம்பு புரண்டு விபத்து: சாரதி படுகாயம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW