கிழக்கு மாகாணத்தில் பாதுகாப்பான புலம்பெயர் தொழில் தொடர்பான விழிப்புணர்வு வேலைத்திட்டம்

Ampara Sri Lanka Eastern Province
By Laksi Sep 06, 2024 10:08 AM GMT
Laksi

Laksi

கிழக்கு மாகாணத்தில் பாதுகாப்பான புலம்பெயர் தொழில் மற்றும் ஆட்கடத்தலுக்கு உள்ளாதல் தொடர்பான விழிப்புணர்வு வேலைதிட்டத்தை மனித அபிவிருத்தி ஸ்தாபனம் நடைமுறைப்படுத்தி வருகின்றது.

இலங்கையில் ஆட்கடத்தலை எதிர்த்து சமுதாய நியாயபிரசாரம் எனும் செயற்பாட்டினூடாக கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் நிந்தவூர், கல்முனை, காரைதீவு ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்று வருகின்றது.

கடந்த இரு வருடங்களுக்கு முன்பு கண்ட நெருக்கடி! தினேஷ் குணவர்தன கூறும் விடயம்

கடந்த இரு வருடங்களுக்கு முன்பு கண்ட நெருக்கடி! தினேஷ் குணவர்தன கூறும் விடயம்

விழிப்புணர்வு நிகழ்வு

இந்த விழிப்புணர்வு நிகழ்வுகளுக்கு கிராம மட்டங்களில் பிரச்சினைக்கு உட்பட்டவர்கள், கிராம மட்ட தலைவர்கள் மற்றும் பெண்கள் என பலரும் பங்குபற்றினர்.

கிழக்கு மாகாணத்தில் பாதுகாப்பான புலம்பெயர் தொழில் தொடர்பான விழிப்புணர்வு வேலைத்திட்டம் | Awareness Regarding Safe Migration In Ampara

மனித அபிவிருத்தி ஸ்தாபன அம்பாறை மாவட்ட பிரதி இணைப்பாளர் எம்.ஐ. றியாழின் நெறிப்படுத்தலில் நடைபெற்று வரும், இவ் விழிப்புணர்வு செயற்பாடுகளில் குறித்த பிரதேச செயலகத்தில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் வளவாளர்களாக கலந்து கொண்டுள்ளனர்.

இதன்போது, பாதுகாப்பான புலம்பெயர் தொழில் மற்றும் ஆட்கடத்தலுக்கு உள்ளாதல் தொடர்பாக மக்களை விழிப்பூட்டி தெளிவுபடுத்தி வருகின்றனர். 

ஜனாதிபதித் தேர்தல்: சமூக ஊடகங்களில் பொய்ப்பிரசாரங்கள் அதிகரித்துள்ளதாக தகவல்

ஜனாதிபதித் தேர்தல்: சமூக ஊடகங்களில் பொய்ப்பிரசாரங்கள் அதிகரித்துள்ளதாக தகவல்

ஊவா மாகாண ஆளுநராக அநுர விதானகமகே நியமனம்

ஊவா மாகாண ஆளுநராக அநுர விதானகமகே நியமனம்

GalleryGallery