கல்முனையில் சுகாதாரத் துறையில் சிறந்து விளங்கிய நிறுவன பிரதானிகளுக்கு விருது
கல்முனையில் (Kalmunai) சுகாதாரத் துறையில் சிறந்து விளங்கிய நிறுவனங்களின் பிரதானிகளுக்கு விருது வழங்கி பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வானது கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் பிரதான மண்டபத்தில் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சகீலா இஸ்ஸதீன் தலைமையில் நேற்று (16) நடைபெற்றுள்ளது.
இதன்போது, 2024 ஆம் ஆண்டில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் பொதுமக்களுக்கு சிறந்த சுகாதார சேவையை வழங்கி வருகின்ற நிறுவனங்களை மதிப்பீடு செய்து பாராட்டி கௌரவிக்கப்பட்டது.
விருதுகள்
அத்தோடு, முதல் மூன்று இடங்களைப் பெற்றுக் கொண்ட பிரதேச வைத்தியசாலைகளுக்கும் இங்கு விருதுகள் வழங்கி பாராட்டி கௌரவிக்கப்பட்டன.
இதில் முதல் இடத்தினை பாலனை பிரதேச வைத்தியசாலை பெற்றுக் கொண்டதுடன். இரண்டாம் மூன்றாம் இடங்களை, சாய்ந்தமருது மற்றும் அக்கரைப்பற்று பிரதேச வைத்தியசாலைகள் பெற்றுக் கொண்டன.
சான்றிதழ்
இதேவேளை ஆரம்ப சுகாதார சேவையை வலுப்படுத்தும் செயல் திட்டத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்வதற்கு பங்களிப்புச் செய்த சுகாதார நிறுவனங்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் இங்கு சான்றிதழ் வழங்கி பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்வில் கல்முனை பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி எம்.சி.எம்.மாஹிர், திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எஸ்.எம்.ஷாஃபி, பிராந்திய சுகாதார தகவல் முகாமைத்துவ பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி ஐ.எம். முஜீப் உட்பட பிராந்திய பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரிகள், வைத்தியசாலைகளின் பொறுப்பு வைத்திய அதிகாரிகள், சுகாதார நிறுவனங்களின் பொறுப்பு வைத்திய அதிகாரிகள், வைத்தியர்கள், சுகாதார உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |