திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனை
Central Bank of Sri Lanka
Economy of Sri Lanka
Money
CBSL
By Rakshana MA
ஒரு இலட்சத்து 73,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனை செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஏல விற்பனை நாளை(14) நடைபெறவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
திறைசேரி உண்டியல்கள்
இந்த அறிவித்தலின் படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 30,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனை செய்யப்படவுள்ளன.
அத்துடன் 182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 70,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனை செய்யப்படவுள்ளன.
இதேவேளை, 364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 73,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |