மட்டக்களப்பு மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் மீது தாக்குதல்

Batticaloa Sri Lanka Politician Sri Lankan Peoples Eastern Province Political Development
By Rakshana MA Feb 08, 2025 11:06 AM GMT
Rakshana MA

Rakshana MA

ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முகமட் சாலி நளீம்(Muhammad Sali Nalim) மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதல் இன்று(08) காலையில் ஏறாவூர் பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக வைத்து ஸ்ரீ லங்கா மக்கள் கட்சி ஆதரவாளர் ஒருவரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,  தாக்குதலுக்குள்ளான நாடாளுமன்ற உறுப்பினர் முகமட் சாலி நளீம் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இலங்கையைப் பற்றிய எலோன் மஸ்க்கின் வெளியிட்ட தகவல்

இலங்கையைப் பற்றிய எலோன் மஸ்க்கின் வெளியிட்ட தகவல்

மேலதிக விசாரணை 

இது தொடர்பாக காயமடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் கருத்து தெரிவிக்கையில்,

அரசியல் பிரச்சினைகள் காரணமாக பள்ளிவாசல் ஒன்றின் முன்பாக வைத்து எனது தந்தை, சகோதரர் மீது இன்று(08) அதிகாலை 6.00 மணியளவில் கலீல் என்பவர் தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.

இதனால் காயமடைந்த சகோதரன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காலையில் கொழும்பில் இருந்து வந்த நான் வைத்தியசாலைக்கு சென்ற நிலையில் ஸ்ரீ லங்கா மக்கள் கட்சி ஆதரவாளர் காதர் என்பவர் வைத்தியசாலையில் வைத்து என்னை தரக்குறைவான வார்தைகளால் பேசினார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் மீது தாக்குதல் | Attack On Batticaloa District Parliamentarian

இதனையடுத்து நான் பொலிஸ் நிலையத்துக்கு சென்று வாகனத்தைவிட்டு இறங்கி உள்சென்ற போது பின்னால் வந்த காதர் என்மீது மோட்டார் சைக்கிளின் தலைக்கவசத்தால் தாக்கியதுடன் பொலிஸ் நிலையத்தினுள் வைத்தும் தாக்க முற்பட்டார் என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார், அப்படி ஒன்றும் நடக்கவில்லை இருவரும் மோதலில் ஈடுபட முயற்சித்தனர் என தெரிவித்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவித்துள்ளனர்.

கிழங்கு கடை சுவையூட்டிகள்! கல்முனையில் மேற்கொள்ளப்பட்ட இரவு நேர திடீர் சோதனை

கிழங்கு கடை சுவையூட்டிகள்! கல்முனையில் மேற்கொள்ளப்பட்ட இரவு நேர திடீர் சோதனை

100க்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் தொடர்பில் வெளியான பின்னணி

100க்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் தொடர்பில் வெளியான பின்னணி

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW