அஸ்வெசும கொடுப்பனவு கிடைக்காத மக்களுக்கு வெளியான அறிவித்தல்
அஸ்வெசும கொடுப்பனவை கடந்த காலங்களில் பெற்றுக் கொள்ளாத குடும்பங்கள் அல்லது தனிநபர்கள் இருப்பின் விசாரணை நடத்தி அவர்களுக்குரிய நீதி வழங்கப்படும் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (06) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.
சமூக நலத்திட்டம்
இது “உண்மையை பேசுவோம் தகுதியானவர்களுக்கு நன்மையினை வழங்குவோம்” எனும் தொனிப் பொருளில் ஆரம்பிக்கப்பட்ட அஸ்வெசும சமூக நலத்திட்டம் ஆகும்.
அத்துடன், நியாயமான காரணங்களின்றி குறிப்பிட்ட குடும்பங்களுக்கு அஸ்வெசும கொடுப்பனவுகள் கிடைக்காத பட்சத்தில் அவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை அரசாங்கம் ஏற்கனவே தயாரித்துள்ளதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், கடந்த காலங்களில் அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் ஆராய குழு ஒன்று நியமனம் செய்யப்பட்டிருந்தது.
இந்த குழுவின் மூலம் குறித்த நலத்திட்டத்திற்குள் உள்வாங்கப்படாத சமுர்த்தி சலுகைகளை கொண்ட தகுதியான மக்கள் தொடர்பில் உள்ள குறைகளை கண்டறிவதற்காக நியமிக்கப்பட்டுள்ளது.
நியமிக்கப்பட்ட குழுவிற்கு ஒரு மாத கால இடைவெளிக்குள் அறிக்கையினை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |