அஸ்வெசும இரண்டாம் கட்ட பதிவு நடவடிக்கை ஆரம்பம்

Sri Lanka Sri Lankan Peoples Money Kalmunai
By Rakshana MA Jan 01, 2025 06:15 AM GMT
Rakshana MA

Rakshana MA

அஸ்வெசும இரண்டாம் கட்ட பதிவு நடவடிக்கையானது இந்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காரைதீவு பிரதேச செயலாளர் க.அருணனின் வழிகாட்டலின் கீழ் காரைதீவு உதவி பிரதேச செயலாளர் செ.பார்த்திபன் தலைமையில் நேற்று(31) பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்படி, இதற்கான பயிற்சி கருத்தரங்குகள் ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் இடம்பெற்று வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் வரவு செலவு பட்டியல் விவாதம் தொடர்பில் வெளியான தகவல்கள்

இலங்கையின் வரவு செலவு பட்டியல் விவாதம் தொடர்பில் வெளியான தகவல்கள்

பதிவு நடவடிக்கை

மேலும், இந்நிகழ்வின் வளவாளர்களாக அம்பாறை மாவட்ட செயலக புள்ளிவிபர அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எம்.முன்சீப், காரைதீவு பிரதேச செயலக புள்ளிவிபர அபிவிருத்தி உத்தியோகத்தர் சிராஜ் முனீர் ஆகியோர் பங்கு பற்றி விளக்கம் கொடுத்தனர்.

அஸ்வெசும இரண்டாம் கட்ட பதிவு நடவடிக்கை ஆரம்பம் | Aswesuma Allowance Application

இந்நிகழ்வில் மாவட்ட தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உத்தியோகத்தர் அஹமட் அஸ்ரி, காரைதீவு பிரதேச செயலக நலன்புரி நன்மைகள் பிரிவு அபிவிருத்தி உத்தியோகத்தர் யு.சுபராஜ், அபிவிருத்தி உத்தியோகத்தர் கி. ஜெயந்தகுமாரி மற்றும் இம்முறை பிரதேச எண்ணீட்டு நடவடிக்கையில் ஈடுபடும் கிராம உத்தியோகத்தர்களும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

இலங்கை அச்சகத் திணைக்களத்தின் மீது சைபர் தாக்குதல்

இலங்கை அச்சகத் திணைக்களத்தின் மீது சைபர் தாக்குதல்

எரிபொருளின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்

எரிபொருளின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW