விவாதத்தில் ஈஸ்டர் தாக்குதல் குறித்த பல விடயங்கள் வெளிப்படுத்தப்படும்: முஜிபுர் ரஹ்மான்
பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு (Aruna Jayasekara) எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும்போது, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் இது வரை வெளிப்படுத்தப்படாத பல விடயங்கள் நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் (Mujibur Rahman) தெரிவித்துள்ளார்.
நம்பிக்கையில்லா பிரேரணை இன்று (11) திங்கட்கிழமை சபாநாயகரிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.
நம்பிக்கையில்லா பிரேரணை
நம்பிக்கையில்லா பிரேரணைக்கு இரண்டு நாட்கள் அவகாசம் கோரியுள்ளதாகவும் இந்த விவாதத்தை விரைவில் நடத்துமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் முஜிபுர் ரஹ்மான் கூறினார்.
அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும், இந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்திட்டுள்ளனர்.
எதிர்க்கட்சிகளில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் இதில், மிகுந்த ஆர்வத்துடன் பணியாற்றி வருகின்றனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து அரசாங்கம் நியாயமான விசாரணையை நடத்த வேண்டுமானால் பிரதி பாதுகாப்பு அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்படுவது அவசியம் என்றும் முஜிபுர் ரஹ்மான் மேலும் சுட்டிக்காட்டினார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |