மூதூரில் ஐஸ் போதை பொருளுடன் குடும்பஸ்தர் கைது
திருகோணமலை - மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், குடும்பஸ்தர் ஒருவர், 10 கிராம் ஐஸ் போதை பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர், திருகோணமலை பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் நேற்று(11) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணை
இது தொடர்பில் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்ததாவது,
போதைப் பொருள் கடத்தப்படுவதாக எங்களுக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, குறித்த இடத்துக்குச் சென்று, சந்தேக நபரை சோதனை செய்த போது, அவரிடமிருந்து போதை பொருள் கைப்பற்றப்பட்டதாக குறிப்பிட்டனர்.
அத்துடன், கைது செய்த சந்தேக நபரை மேலதிக விசாரணைக்காக மூதூர் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டினர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |