இறுதியில் முஸ்லிம் திருமண சட்டத்தில் கை வைத்துள்ள உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன்
எந்தவித அடிப்படையும் தெரியாமல் முஸ்லிம் விவாக - விவகாரத்து தொடர்பில் பிழையான கருத்தை நாடாளுமன்றில் முன் வைத்துள்ளார் உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன்.
கடந்த 8ஆம் திகதி இடம்பெற்ற மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு மீதான வரவுசெலவுத்திட்ட விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு அடிப்படை தெரியாமல் கருத்தை முன் வைத்துள்ளார் என சட்டத்தரணி நுஸ்ரா ஷாரூக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சிறுவயதுத்திருமணம்
இது தொடர்பில் சட்டத்தரணி மேலும் தெரிவிக்கையில்,
முஸ்லிம்களின் நடத்தை தனித்துவமானது அவர்களின் மற்றைய சமூகத்தை விடவும் வித்தியாசமானவர்கள் அவர்களுக்கு என்று தனித்துவமான பாதையில் உள்ளவர்கள் என குறிப்பிட்டிருந்தார்.
இது வரவேற்க தக்கது இருப்பினும், சில கருத்துக்கள் எந்த அடிப்படையும் இல்லாமல் எங்களது தனிப்பட்ட சட்டத்தில் திருத்தும் கொண்டுவர வேண்டும் என கூறியிருந்தார். ஆட்டை கடித்து மாட்டை கடித்து இறுதியில் முஸ்லிம் பெண்களின் திருமண சட்டத்தில் கை வைத்துள்ளார்.
அவர் தனது கருத்தில் குறிப்பிட்டவை, 12வயதுக்குட்பட்ட பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்கின்றனர். mmdp இன் report இன் அடிப்படையில் எந்தவொரு அடிப்படை அறிவும் இல்லாம முஸ்லிம் விவாகம் மற்றும் விவாகரத்து சம்பந்தமாக மற்றும் தலாக்-பஸ்கு சம்பந்தமாக பேசியிருக்கிறார்.
அதுமட்டுமில்லாம பெண் தன் விருப்பத்தில் திருமணம் முடிக்க வேண்டும் எனவும் தந்தை அல்லது தந்தையின் குடும்பத்தினர் அனுமதி தேவையில்லை எனவும் சுட்டிக்காட்டியிருந்தார்.
நாங்கள் undpஇன் report ஐ பின்பற்றுபவர்கள் அல்ல. அல் -குரான் ஸுன்னாவை மட்டும் தான் நாங்கள் பின்பற்றி வாழ்கின்றோம். யாரும் யாருடனும் இருக்கலாம் விரும்பினால் திருமணம் செய்யலாம் இல்லை என்றால் பிரியலாம் என்பது எங்களுக்கு பொறுந்தாதவைகள்.
இதனை தொடர்ந்து சர்வதேச ஊடகமொன்றில் வெளியிடப்பட்ட அறிக்கையொன்றில், இலங்கையில் பாடசாலையில் கல்வி பயியிலும் சிறுமியர் சிறு வயதிலே கர்ப்பம் தரித்தவர்கள், 2023ஆம் ஆண்டு 163 பேரும், 2024ஆம் ஆண்டு 213 பேரும் என ஆய்வுக்கட்டுரை வெளியிட்டுள்ளது.
இது பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் துஸ்பிரயோக அமைப்பின் அறிக்கை இதனை தான் சர்வதேச மேற்கோள் காட்டி ஆய்வுக்கட்டுரை எழுதியுள்ளது. ஆகவே, மாற்ற வேண்டும் தான் ஆனால் யாருக்கும் பாதிப்பு வராமல் மாற்ற வேண்டும் என்பது சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |