திறைசேரிக்கான புதிய அதிகாரிகளை நியமனம் செய்ய அமைச்சரவை அனுமதி
திறைசேரிக்கான உயர் முகாமைத்துவத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடங்களுக்கு புதிய அதிகாரிகளை நியமனம் செய்ய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சமர்ப்பித்த யோசனைக்கமைய இப்புதிய நியமனங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வழங்கப்பட்டுள்ள பதவிகள்
தற்போது திறைசேரியின் பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றும் இலங்கை கணக்காளர் சேவையின் உத்தியோகத்தரான எச். சீ. டீ. எல். சில்வாவை திறைசேரியின் பிரதிச் செயலாளராக நியமிக்க அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதோடு,
பிரதிச் செயலாளராகக் கடமையாற்றும் ஆர். எம். பீ. ரத்னாயக்க எதிர்வரும் நவம்பர் 6 ஆம் திகதி ஓய்வு பெற்ற பின்னர் அவ் வெற்றிடத்திற்கு தற்போது வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றும் டீ. ஏ. பீ. அபேசேகரவை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் எச். சீ. டீ. எல். சில்வாவிற்கு பதவி மாற்றம் செய்ததனால் அவருடைய தற்போதைய பதவிக்கு அரச நிதித் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகமாகக் கடமையாற்றும் இலங்கை கணக்காளர் சேவையின் அதிகாரியான ஏ. என். ஹபுகலவை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கருத்திட்ட முகாமைத்துவம் மற்றும் மேற்பார்வைத் திணைக்களத்தின் இலங்கை திட்டமிடல் சேவையின் அதிகாரியான என்.எஸ்.எம்.பீ.ரஞ்சித்தை குறித்த திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கவும்.
தற்போது வெற்றிடமாகவுள்ள தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு குறித்த திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகமாகக் கடமையாற்றும் அதிகாரியான ஜே. எம். எஸ். டீ. ரத்னாயக்கவை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |