கிழக்கு மாகாண திணைக்களங்களுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

Trincomalee Sri Lanka Eastern Province
By Laksi Dec 27, 2024 08:54 AM GMT
Laksi

Laksi

கிழக்கு மாகாண சபையின் திணைக்களத் தலைவர்கள் மற்றும் நிறுவனங்களின் புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்னசேகர இன்று (27) அவர்களுக்கான நியமனக் கடிதத்தை வழங்கி வைத்துள்ளார்.

கிழக்கு மாகாண திணைக்களங்களில் தலைவர்களாக கடமையாற்றிய உத்தியோகத்தர்களுக்குளேயே இந்தப் பணியிடங்கள் மாற்றியமைத்து நியமிக்கப்பட்டுள்ளனர்.

அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு குறித்து வெளியான தகவல்

அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு குறித்து வெளியான தகவல்

புதிய தலைவர்கள்

அதற்கமைவாக, நிர்வாக பிரதிப்பிரதம செயலாளராக திரு விமலரத்னம் பதில் கடமைக்காக நியமித்துள்ளார்.

முதலமைச்சின் சிரேஷ்ட உதவி செயலாளராக என். சிவலிங்கம்

மாகாண உள்ளுராட்சி ஆணையாளராக ஏ.எல்.எம். அஸ்மி

கிழக்கு மாகாண கிராமிய கைத்தொழில் திணைக்கள பணிப்பாளராக என்.மணிவண்ணன்

கிழக்கு மாகாண காணி ஆணையாளராக வளர்மதி ரவீந்திரன்

கிழக்கு மாகாண மேலதிக கல்வி பணிப்பாளராக ஐ.எம். றிக்காஸ்

அக்கரைப்பற்று மாநகர சபை ஆணையாளராக என்.எம். நௌபீஸ் 

மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளராக என். தனஞ்சயன்

கல்முனை மாநகர சபை ஆணையாளராக ஏ.ரீ.எம். ராபீ

ஆளணி மற்றும் பயிற்சி பிரிவு பணிப்பாளராக எம்.ஆர். பாத்திமா ரிப்கா

மாகாண விளையாட்டு திணைக்கள பணிப்பாளராக எஸ்.. பிரகாஷ்

மாகாண சமூக சேவைகள் திணைக்கள பணிப்பாளராக யூ. சிவராஜா

மோட்டார் போக்குவரத்து ஆணையாளராக எஸ். வருணி

மட்டக்களப்பு மாவட்ட உதவி உள்ளுராட்சி ஆணையாளராக வீ. தேவநேசன்

கிராமிய அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளராக கே. இளம்குமுதன் ஆகியோர்  நியமிக்கப்பட்டுள்ளனர்.

வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

பேராசிரியர் இஸ்ஹாக்கின் மறைவு கவலை தருகின்றது:ரிஷாட் அனுதாபம்

பேராசிரியர் இஸ்ஹாக்கின் மறைவு கவலை தருகின்றது:ரிஷாட் அனுதாபம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery