க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் விசேட அறிவிப்பு

Department of Examinations Sri Lanka G.C.E. (O/L) Examination Education
By Laksi Nov 04, 2024 04:36 PM GMT
Laksi

Laksi

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் நாளை (05) முதல் நவம்பர் 30 ஆம் திகதி வரை இணையவழி மூலம் சமர்ப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயமானது பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பரீட்சைக்குத் தோற்றவுள்ள அனைத்து பாடசாலை விண்ணப்பதாரர்களும் தங்கள் பாடசாலை அதிபர் மூலமாகவும் தனியார் விண்ணப்பதாரர்கள் தனிப்பட்ட முறையில் உரிய அறிவுறுத்தல்களின்படி தங்கள் விண்ணப்பங்களை இணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

முஸ்லிம் தலைமைகளை அரசியலிலிருந்து இல்லாதொழிக்க முயற்சி: ரிஷாட் பகிரங்கம்

முஸ்லிம் தலைமைகளை அரசியலிலிருந்து இல்லாதொழிக்க முயற்சி: ரிஷாட் பகிரங்கம்

பரீட்சைக்கான விண்ணப்பம்

மேலும், தனியார் விண்ணப்பதாரர்கள் பரீட்சைக்கான விண்ணப்பத்தை தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்தியும், தேசிய அடையாள அட்டை இல்லாத தனியார் விண்ணப்பதாரர்கள் தங்கள் பாதுகாவலரின் (தாய் அல்லது தந்தை) தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்தி பதிவு செய்ய வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் விசேட அறிவிப்பு | Applications Invited For G C E O L Examination

இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk/eic இல் இது தொடர்பான அறிவுறுத்தல்களை படித்து அதற்கேற்ப விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராமப்புற முஸ்லிம்களின் புனித ஹஜ் யாத்திரை: விஜித ஹேரத் விடுத்துள்ள கோரிக்கை

கிராமப்புற முஸ்லிம்களின் புனித ஹஜ் யாத்திரை: விஜித ஹேரத் விடுத்துள்ள கோரிக்கை

பாடசாலை மாணவர்களின் சீருடை தொடர்பில் சீன அரசாங்கம் வெளியிட்ட தகவல்

பாடசாலை மாணவர்களின் சீருடை தொடர்பில் சீன அரசாங்கம் வெளியிட்ட தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW