யாழில் பலரின் கவனத்தை ஈர்த்த ஜனாதிபதியின் தமிழ்!
யாழ்ப்பாணத்திற்கு நேற்றையதினம் விஜயம் செய்திருந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டார்.
இதன்போது, பொதுமக்கள் சார்பான பல்வேறு பிரச்சினைகள் குறித்து இதன்போது கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன், தீர்வுகள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டன.
சமூக வலைத்தள விமர்சனங்கள்
இந்தநிலையில், ஜனாதிபதியின் யாழ். விஜயம் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிக பேசுபொருளாக மாறியுள்ளது.
குறிப்பாக, ஜனாதிபதி வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது கருத்துத் தெரிவிக்கையில்,
முன்வைத்த திட்டங்கள் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், சில சமூக வலைத்தள விமர்சனங்களையும் ஒருசேர பெற்றுக் கொண்டுள்ளது.
நேற்றைய விஜயத்தின் போது, ஒரு தாயார் ஜனாதிபதியை சந்தித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியமை தொடர்பான ஒரு புகைப்படம் அதிகளவில் பகிரப்படுவதுடன், சாதக மற்றும் பாதகமான விமர்சனங்களை தோற்றுவித்துள்ளது.
இது தவிர, நேற்றையதினம் ஜனாதிபதி உரையாற்றிக் கொண்டிருக்கும்போது பொதுமக்களைப் பார்த்து இதுபோன்ற ஒரு ஆட்சி நல்லதா இல்லையா என்று பொதுமக்களிம் வினவிவிட்டு, பின்னர் தமிழில் “நல்லம் நல்லம்” என்று கருத்துரைத்தமை இங்கு பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அத்துடன், தமிழ், சிங்களம், கத்தோலிக்கம் மற்றும் இஸ்லாம் பண்டிகைகளைத் தவிர்த்து இலங்கையர்களுக்காக ஒரு பண்டிகையை ஒக்டோபரில் கொண்டாட நான் வழிவகுப்பேன் என்பதும், அந்த பண்டிகையின் உள்ளடக்கங்களும் கூட இலங்கையர்களின் கவனத்தை ஈர்த்தது.
குறிப்பாக, சொல்லப் போனால் இதுவரை நாட்களும் ஆட்சி செய்த அரசாங்கங்களும், ஆட்சியாளர்களும் தனித்தனி சமூகம், தனித்தனி உரிமை, தனித்தனி சலுகைகள் என்று அறிவித்து பிரித்தாளும் நகர்வினை மேற்கொண்டிருந்த நிலையில், தற்போதைய அரசு இலங்கையர்கள் என்ற ஒரே சமூகத்திற்காக பணியாற்றக் காத்திருக்கின்றோம் என்று கூறியமை கைத்தட்டி நிச்சயமாக வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுதான்.
இருந்தாலும், இதன் முழு வெற்றி என்பது சொல்லில் அல்லாமல் செயலில் பிரதிபலிக்கும் போதுதான் தெரியும்..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |