அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்: ஜனாதிபதி உத்தரவு

Anura Kumara Dissanayaka Sri Lanka Climate Change Weather
By Laksi Oct 12, 2024 04:18 PM GMT
Laksi

Laksi

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு அறிவித்துள்ளார்.

அத்துடன், சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள மக்களின் பாதுகாப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படுவதை உறுதி செய்யுமாறும், நிவாரணப் பணிகளை வினைத்திறனாக செயற்படுத்துவதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறும் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண பணிகளுக்காக 50 மில்லியன் ரூபாவை ஒதுக்குமாறு நிதியமைச்சிற்கு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி, உரிய நிவாரணங்களை முறையாக மக்களுக்கு வழங்குவதற்கு நன்கு ஒருங்கிணைந்து செயற்படுமாறும் அரச அதிகாரிகளுக்கு மேலும் அறிவித்துள்ளார்.

கிழக்கு ஆளுநரை சந்தித்து கலந்துரையாடிய இந்திய பிரதி உயர்ஸ்தானிகர்

கிழக்கு ஆளுநரை சந்தித்து கலந்துரையாடிய இந்திய பிரதி உயர்ஸ்தானிகர்

அரசாங்கம் நடவடிக்கை

பாதிக்கப்பட்ட அனைத்து பிரஜைகளுக்கும் தேவையான உதவிகளை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள உள்ளூராட்சி மன்ற அதிகாரிகள் மக்களுக்கு தேவையான உதவிகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்: ஜனாதிபதி உத்தரவு | Anura Orders To Provide Relief To Affected People

மக்களுக்கான பாதுகாப்பு பணிகள் பூர்த்தியாகும் வரை பொதுமக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் அவசரகால நிலைமைகள் பற்றிய தகவல்களை, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் 117 அழைப்பு நிலையம் மற்றும் 0112136136, 0112136222, 0112670002 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அழைத்து தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.   

மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிசிரிவி கமராவை திருடிய சிற்றூழியர் ஒருவர் கைது

மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிசிரிவி கமராவை திருடிய சிற்றூழியர் ஒருவர் கைது

மனித பாவனைக்கு பொறுத்தமற்ற டின் மீன்கள் கண்டுபிடிப்பு

மனித பாவனைக்கு பொறுத்தமற்ற டின் மீன்கள் கண்டுபிடிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW