அரிசி விலை தொடர்பான பிரச்சினை: ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை

Anura Kumara Dissanayaka Sri Lanka Rice
By Laksi Oct 25, 2024 01:18 PM GMT
Laksi

Laksi

அரிசி விலை தொடர்பான பிரச்சினையை தீர்ப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவசாய அமைச்சு மற்றும் நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி இன்று (25) முற்பகல் அவரது அலுவலகத்தில் விவசாய மற்றும் வர்த்தக அமைச்சுகள் மற்றும் நெல் சந்தைப்படுத்தல் சபையின் அதிகாரிகள் குழுவை சந்தித்து கலந்துரையாடிய போதே இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது, அரிசி விலை மற்றும் அது தொடர்பான தற்போதைய நிலவரங்கள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

கிழக்கு ஆளுநரை சந்தித்த சுவிட்சர்லாந்து தூதரகத்தின் முதன்மைச் செயலாளர்

கிழக்கு ஆளுநரை சந்தித்த சுவிட்சர்லாந்து தூதரகத்தின் முதன்மைச் செயலாளர்

அரிசி தட்டுப்பாடு

இதேவேளை, கடைகளில் அரிசி தட்டுப்பாடு இருந்தாலும் நாட்டில் அரிசி தட்டுப்பாடு இல்லை போதுமான அளவில் அரிசி கையிருப்பு இருப்பதாகவும் தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட தேர்தல் பரப்புரைக்கூட்டத்தில்  ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

அரிசி விலை தொடர்பான பிரச்சினை: ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை | Anura Order Regarding Price Of Rice

அத்தோடு, உள்நாட்டு உற்பத்திகளை அதிகரிக்க வேண்டும் அதன் மூலமாக நாட்டு மக்களுக்கு அரிசியை விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி அநுர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம் காங்கிரஸிற்கு துரோகம் செய்தவர்கள் அரசியலில் நிலைக்கப்போவதில்லை : ரிஷாட் பகிரங்கம்

முஸ்லிம் காங்கிரஸிற்கு துரோகம் செய்தவர்கள் அரசியலில் நிலைக்கப்போவதில்லை : ரிஷாட் பகிரங்கம்

இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் அறிவிப்பு

இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW