நாட்டில் தொடரும் பிரமிட் மோசடி....முன்னெடுக்கவுள்ள நடவடிக்கை
பெருங்கவலையின் உச்சகட்டம் சூழ்ச்சியான பிரமிட் திட்டம்” என்ற தொனிப்பொருளின் கீழ் இலங்கை மத்திய வங்கியின் நிதியியல் வாடிக்கையாளர் தொடர்புகள் திணைக்களம் 2025 யூலை 14 தொடக்கம் 18 வரை பிரமிட் எதிர்ப்பு தேசிய விழிப்புணர்வு வாரத்தினை தொடங்கவுள்ளது.
தேசிய முன்னெடுப்பானது நிதியியல் உறுதிப்பாட்டினைப் பேணுதல் மற்றும் நிதியியல் வாடிக்கையாளரின் நல்வாழ்வை மேம்படுத்தல் என்ற இலங்கை மத்திய வங்கியின் பொறுப்பாணையுடன் இது அணிசேர்ந்துள்ளது.
பிரமிட் மோசடி
பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், முப்படையினர், தேசிய பாதுகாப்புத் திணைக்கள ஆளணி, இலங்கைப் பொலிஸ் உத்தியோகத்தர்கள், அரச ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளடங்கலான சனத்தொகையின் பரந்தளவிலான பிரிவினர் மத்தியில் இப்பிரசார நடவடிக்கை கணிசமான தேசிய விழிப்புணர்வை ஏற்படுத்துமென எதிர்பார்க்கப்படுகிறது.
விழிப்புணர்வு நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் 6,172 பாடசாலைகள் மற்றும் 14,022 கிராம சேவையாளர்கள் பிரிவினூடாக மக்களைச் சென்றடைந்து, அடிப்படை மட்டத்தில் உள்ளவர்களை உள்ளடக்குவதையும் சமூக ஈடுபாட்டையும் உறுதிசெய்யும்.
விழிப்புணர்வு வாரம் முழுவதும், தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்களுடன் தொடர்புடைய சட்ட ஏற்பாடுகள், அத்தகைய வியாபார மாதிரிகளின் ஏமாற்றும் தன்மை மற்றும் கட்டமைப்பு, பிரமிட் திட்டங்களில் முதலிடுவதன் நிதியியல் மற்றும் இடர்நேர்வு விளைவுகள், தனிப்பட்ட வாழ்க்கை அனுபவங்கள், மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் அனுபவித்த துன்பங்கள் போன்ற விடயங்கள் பற்றி பங்கேற்பாளர்களுக்கு அறிவூட்டப்படும்.
பரந்தளவிலான மற்றும் செயல்திறன்மிக்கவிதத்தில் இந்நிகழ்வு சென்றடைவதை உறுதிப்படுத்தும் பொருட்டு பலவகை ஊடக உபாயங்கள் உபயோகிக்கப்படும்.
விழிப்புணர்வு
பத்திரிகை விளம்பரங்கள், சமூக ஊடக பிரசாரங்கள், கல்விசார் சுவரொட்டிகள், நேரலை அமர்வுகள், தொலைக்காட்சி மற்றும் வானொலி நிகழ்ச்சிகள், செய்திக்குறிப்பு வாசகங்கள், நாடளாவிய ரீதியில் பொதுமக்கள் செயலமர்வுகள் போன்றவற்றை இது உள்ளடக்கியிருக்கும்.
இப்பிரச்சார நடவடிக்கைகளில் முனைப்போடு பங்குபற்றி விடயங்கள் பற்றி அறிந்திருக்குமாறு இலங்கை மத்திய வங்கி அனைத்து பொதுமக்களையும் ஊக்குவிக்கிறது.
நிதியியல் மோசடிகளிலிருந்து தம்மையும் பிறரையும் பாதுகாத்துக்கொள்ளவும் நிதியியல் முறைமையில் நம்பிக்கையைப் பேணிக்காக்கவும் விழிப்புணர்வும் மற்றும் அவதானமும் முக்கியமானதாகும்.
மேலதிகத் தகவல்களுக்கும் மற்றும் இற்றைப்படுத்தல்களுக்கும் தயவுசெய்து இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினைப் பார்வையிடவும் அல்லது அதன் சமூக ஊடகத் தங்களில் இலங்கை மத்திய வங்கியினைப் பின்தொடரவும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |