சம்மாந்துறையில் மண்ணில் புதைக்கப்பட்ட நிலையில் கசிப்பு பொருட்கள் மீட்பு
சம்மாந்துறையில் மண்ணில் புதைக்கப்பட்ட நிலையில் ஒரு தொகுதி கசிப்பு பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த நடவடிக்கையானது, நேற்று (19) சம்மாந்துறை பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளது.
அம்பாறை - சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தை பகுதியில் உள்ள வயல்வெளியில் நீண்ட காலமாக இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையமே இவ்வாறு முற்றுகை இடப்பட்டு மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸாரின் நடவடிக்கை
சம்மாந்துறை பொலிஸ் ஊழல் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இவ்வாறு மண்ணில் புதைக்கப்பட்ட கசிப்பு உற்பத்தி பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அதேவேளை, குறித்த வியாபார செயலில் ஈடுபட்ட சந்தேக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் பொலிஸ் ஊழல் ஒழிப்பு பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் மீட்கப்பட்ட பொருட்களில் 2 பரள் கோடா, பழ வகைகள், கொள்கலன்கள் என்பன உள்ளடங்குவதுடன் பொருட்கள் யாவும் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு சட்ட நடவடிக்கைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





