கிழக்கு மாகாண கல்வி செயலாளர் குணநாதன் கல்முனைக்கு விஜயம்

Sri Lankan Peoples Eastern Province Education
By Rakshana MA May 20, 2025 09:05 AM GMT
Rakshana MA

Rakshana MA

கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் குணநாதன் கல்முனை கல்வி வலயத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

கல்முனை வலய கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹதூல் நஜீம் தலைமையில் நேற்று (19) கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை மண்டபத்தில் நடைபெற்ற அதிபர்களுடான சந்திப்பில் கலந்து கொண்டுள்ளார்.

இதன்போது கல்விச்செயலாளர் கருத்து தெரிவிக்கையில், மாணவர்களின் கல்வி,நிர்வாகம்,மாணவர்கள் ஒழுக்கம் என்பவற்றிலும், ஆசிரியர்களிடமிருந்து பாடசாலை உச்சப் பயனை பெறுவதிலும் அதிபர்களின் வகிபாகம் மிக முக்கியமானது.

தங்க விலையில் வீழ்ச்சி! வாங்கவுள்ளோருக்க வெளியான அறிவிப்பு

தங்க விலையில் வீழ்ச்சி! வாங்கவுள்ளோருக்க வெளியான அறிவிப்பு

செயலாளரின் கல்முனை விஜயம்

இதன்படி, மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் சரியான வழிகாட்டல்களை அதிபர்கள் செய்ய வேண்டியது மிக அவசியம்.

கிழக்கு மாகாண கல்வி செயலாளர் குணநாதன் கல்முனைக்கு விஜயம் | Eastern Province Education Secretary Visits

வலயக் கல்வி பணிப்பாளர் மாணவர்களுக்கு கிடைக்கும் பயனை உரிய நேரத்தில் பெற்றுக் கொடுப்பதன் அவசியத்தை குறிப்பிட்டு அரசு அளிக்கும் நிதி உதவியை மாணவர்களுக்கு அதிபர்கள் பெற்றுக் கொடுப்பதில் பின் நிற்க கூடாது.

இதன்போது அண்மையில் வெளியான கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் முதலாமிடம் பெற்று மருத்துவ துறைக்கு தெரிவான மாணவியும் பொறியல் துறையில் முதலாமிடம் பெற்ற மாணவனுக்கும் நினைச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

அதேவேளை, பௌதீக வளம் குறைந்த மூன்று பாடசாலைகளுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டதுடன் இருபது மாணவர்களுக்கு அவர்களின் கல்விச் செலவுக்கான காசோலையும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிப்பு

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிப்பு

கிழக்கில் அதிகரிக்கும் கடற்கொள்ளையர்களின் திருட்டு சம்பவங்கள் : மக்கள் முன்வைத்துள்ள கோரிக்கை

கிழக்கில் அதிகரிக்கும் கடற்கொள்ளையர்களின் திருட்டு சம்பவங்கள் : மக்கள் முன்வைத்துள்ள கோரிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW       


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery