காற்றின் தரம் தொடர்பில் வெளியான அறிவித்தல்
Sri Lanka
Sri Lankan Peoples
Air Pollution
By Rakshana MA
நாட்டின் சில பகுதிகளில் இன்று (16) காற்றின் தரம் ஆரோக்கியமான நிலையில் காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் கற்கைகள் மற்றும் சேவைகள் பிரிவு அத்துடன் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகனப்புகைப் பரீட்சை நம்பிக்கை நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
காற்றின் தரம்
அந்தவகையில், அடுத்த 24 மணித்தியாலங்களுக்குக் காற்றின் தரச் சுட்டெண் 34 - 76க்கும் இடையில் இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கொழும்பு 07, வவுனியா, நுவரெலியா, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, களுத்துறை மற்றும் மொனராகலை ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமான நிலையில் இருக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |