பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான தகவல்
சிங்கள மற்றும் தமிழ் மொழி மூல அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான 2025 ஆம் ஆண்டுக்கான முதல் கல்வி பருவத்தின்(1st Term) முடிவு மற்றும் தொடக்கம் குறித்த விவரங்களை கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.
அதன்படி, 2025 ஆம் ஆண்டிற்கான முதல் கல்விப் பருவத்தின் முதல் கட்டம் 14 மார்ச் 2025 வெள்ளிக்கிழமையுடன் முடிவடையும்.
முதல் கல்விப் பருவத்தின் இரண்டாம் கட்டம் 01 ஏப்ரல் 2025 செவ்வாய்கிழமை தொடங்கும் என தெரிவித்துள்ளது.
மாணவர்களுக்கான அறிவித்தல்
இந்நிலையில், கடந்த தினங்களில் பட்டப்படிப்பிற்கு தயாராகும் மாணவர்களுக்கு இன்னுமொரு அறிவிப்பினையும் வெளியிட்டிருந்தது.
அதில், பட்டப்படிப்புகளைத் தொடங்குவதற்கு முன்னர், சம்பந்தப்பட்ட நிறுவனங்களை முறையாக விசாரிக்க வேண்டும் என கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |