2025ஆம் ஆண்டுக்கான கல்வி செயற்பாடுகள் குறித்து வெளியான அறிவிப்பு

Ministry of Education Sri Lankan Schools Education School Children
By Laksi Dec 16, 2024 09:47 AM GMT
Laksi

Laksi

2025ஆம் ஆண்டுக்கான பாடசாலை தவணை கால அட்டவணையை கல்வியமைச்சு இன்று (16) வெளியிட்டுள்ளது.

அதற்கமைய முதலாம் தவணை மூன்று கட்டங்களின் கீழ் இடம்பெறவுள்ளதாக அமைச்சு தெரிவி்த்துள்ளது.

எதிர்வரும் ஜனவரி மாதம் 27ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 14ஆம் திகதி வரை முதற் கட்டம் இடம்பெறும். ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் 11ஆம் திகதி வரை இரண்டாம் கட்டம் இடம்பெறும்.

தங்கம் வாங்கவுள்ளோருக்கான தகவல் : விலையில் ஏற்பட்ட மாற்றம்

தங்கம் வாங்கவுள்ளோருக்கான தகவல் : விலையில் ஏற்பட்ட மாற்றம்

கல்வி செயற்பாடுகள்

ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி முதல் மே மாதம் 9ஆம் திகதி வரை முதலாம் தவணையின் மூன்றாம் கட்ட கல்வி செயற்பாடுகள் இடம்பெறுமென கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

2025ஆம் ஆண்டுக்கான கல்வி செயற்பாடுகள் குறித்து வெளியான அறிவிப்பு | Announcement 2025 Term School Timetable

இரண்டாம் தவணையானது மே மாதம் 14ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 07ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படும்.

மூன்றாம் தவணை இரண்டு கட்டங்களின் கீழ் இடம்பெறவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

கல்வி தகைமை சரிபார்ப்பு : காத்திருப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

கல்வி தகைமை சரிபார்ப்பு : காத்திருப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

முதலாம் கட்டம் 

அதற்கமைய ஓகஸ்ட் மாதம் 18ஆம் திகதி முதல் ஒக்டோபர் 17ஆம் திகதி வரை முதலாம் கட்டம் இடம்பெறவுள்ளது.

2025ஆம் ஆண்டுக்கான கல்வி செயற்பாடுகள் குறித்து வெளியான அறிவிப்பு | Announcement 2025 Term School Timetable

நவம்பர் மாதம் 17ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 19ஆம் திகதி வரை இரண்டாம் கட்ட கல்வி செயற்பாடுகள் இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவி்த்துள்ளது.

அம்பாறை சர்வதேச மனித உரிமைகள் பாதுகாப்பு மையத்தினால் வைத்தியசாலைக்கு குருதிக்கொடை

அம்பாறை சர்வதேச மனித உரிமைகள் பாதுகாப்பு மையத்தினால் வைத்தியசாலைக்கு குருதிக்கொடை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW