அம்பாறை சர்வதேச மனித உரிமைகள் பாதுகாப்பு மையத்தினால் வைத்தியசாலைக்கு குருதிக்கொடை

Ampara Hospitals in Sri Lanka Eastern Province
By Laksi Dec 16, 2024 09:11 AM GMT
Laksi

Laksi

கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் நிலவும் குருதிப் பற்றாக்குறையை கருத்திற்கொண்டு சர்வதேச மனித உரிமைகள் பாதுகாப்பு மையம் (IHRM) அமைப்பின் அம்பாறை மாவட்ட குழு, சார்பாக வைத்தியசாலைக்கு குருதி நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வானது கடந்த வெள்ளிக்கிழமை (13/12/2024)"உதிரம் கொடுத்து உயிர் காப்போம்" எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தங்கம் வாங்கவுள்ளோருக்கான தகவல் : விலையில் ஏற்பட்ட மாற்றம்

தங்கம் வாங்கவுள்ளோருக்கான தகவல் : விலையில் ஏற்பட்ட மாற்றம்

குருதிக்கொடை

அம்பாறை மாவட்ட பணிப்பாளர் ஏ.ஜே.எப்.பைரோஸாவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தநிகழ்வுக்கு அமைப்பின் தேசிய தலைவர் கலாநிதி ரீ.றிஸ் வான் காஸீம், கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி ஏ.எல்.எப்.றஹ்மான் மற்றும் தர முகாமைத்துவ வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.ஆர்.எம்.ஹாரிஸ் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.

இங்கு அமைப்பின் உயர் பீட உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டு குருதி வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

கல்வி தகைமை சரிபார்ப்பு : காத்திருப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

கல்வி தகைமை சரிபார்ப்பு : காத்திருப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

மின் கட்டணக்குறைப்பு : பொதுமக்களின் கருத்து பதிவிடல் நாளை முதல்!

மின் கட்டணக்குறைப்பு : பொதுமக்களின் கருத்து பதிவிடல் நாளை முதல்!

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW