சம்மாந்துறையில் உலாவும் கட்டாக்காலி மாடுகள் : உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Sri Lankan Peoples Eastern Province Sammanthurai
By Rakshana MA Apr 04, 2025 05:57 AM GMT
Rakshana MA

Rakshana MA

சம்மாந்துறையில்(Sammanthurai) போக்குவரத்துக்கு இடையூறாக காணப்பட்ட கட்டாக்காலி மாடுகளை சம்மாந்துறை பிரதேச சபையினர் பொலிஸாருடன் இணைந்து நேற்று(03) கையகப்படுத்தியுள்ளனர்.

சம்மாந்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் கட்டாக்காலி மாடுகளினால் அன்றாடம் வீதி விபத்துக்கள் ஏற்படுவதுடன், பெறுமதியான பயிர் வகைகளும் சேதப்படுத்தப்படுவதாக பல்வேறு முறைப்பாடுகள் பிரதேச சபைக்கு வழங்கப்பட்டுள்ளன.

குறித்த முறைப்பாடுகளுக்கு அமைய சம்மாந்துறை நகர் பிரதேசத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக காணப்பட்ட மாடுகள் கையகப்படுத்தப்பட்டுள்ளன.

உயர் பாதுகாப்புக்கு மத்தியில் இன்று இலங்கை வரவுள்ள மோடி!

உயர் பாதுகாப்புக்கு மத்தியில் இன்று இலங்கை வரவுள்ள மோடி!

கையகப்படுத்தப்பட்ட கட்டாக்காலி மாடுகள் 

பிரதேச சபையினால் கட்டாக்காலி மாடுகளின் உரிமையாளருக்கு பல தடவைகள் அறிவுறுத்தல் வழங்கப்பட்டும், அவை கவனத்தில் கொள்ளாமையினால் குறித்த மாடுகளின் உரிமையாளர்கள் தண்டப்பணம் செலுத்தி தங்களது மாடுகளை கொண்டு செல்ல வேண்டும்.

சம்மாந்துறையில் உலாவும் கட்டாக்காலி மாடுகள் : உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Ampara District Council Seizes Cattle

மேலும் ஒரு நாளைக்கு பின் மாடுகளை பெற்றுக்கொள்ளாத உரிமையாளருக்கு பராமரிப்புச் செலவும் மேலதிகமாக அறவிடப்படும் எனவும் 3 நாட்களுக்குள் மாடுகளை உரிமையாளர்கள் பெறாவிட்டால் பொலிஸார் ஊடாக நீதிமன்றத்தில் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக பிரதேச சபை தெரிவித்துள்ளது.

தனிமைப்படுத்தப்பட்டுள்ள பாகிஸ்தான் ஜனாதிபதி

தனிமைப்படுத்தப்பட்டுள்ள பாகிஸ்தான் ஜனாதிபதி

சலுகை விலை உணவுப் பொருட்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட திடீர் முடிவு

சலுகை விலை உணவுப் பொருட்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட திடீர் முடிவு

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGallery