சலுகை விலை உணவுப் பொருட்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட திடீர் முடிவு
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு சலுகை விலையில் உணவுப் பொருட்கள் அடங்கிய பொதிகளை வழங்க அரசாங்கம் எடுத்த முடிவு தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக தேர்தல் ஆணைக்குழுவால் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த உணவுப் பொருட்கள் அடங்கிய பொதிகளை தேர்தலுக்குப் பின்னர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி செயலாளருக்கும், வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் செயலாளருக்கும் எழுத்து மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சலுகை விலையில் உணவுப் பொதி
இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் ஒரு பரிந்துரையின் கீழ் தகுதியான பயனாளர்களுக்கு இந்த உணவுப் பொதிகள் வழங்க திட்டமிடப்பட்டிருந்தது.
அதன்படி 5000 ரூபா மதிப்புள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய பொதியின 2500 ரூபாவிற்கு சலுகை விலையில் வழங்க தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இதற்கான அமைச்சரவை அனுமதி சமீபத்தில் கிடைத்திருந்தது.
ஏப்ரல் 1 முதல் 13 வரையிலான காலத்தில் இவை லங்கா சதொச மற்றும் கோ-ஆப் விற்பனை நிலையங்கள் வழியாக விநியோகிக்க திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |