அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்
அம்பாறை மாவட்ட விசேட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இது கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ(Wasantha Piyadissa) தலைமையில் நேற்று(11) நடைபெற்றுள்ளது.
முன்மொழியப்பட்ட தேவைகள்
இதன் போது நிந்தவூர் பிரதேச கலாச்சார மண்டப நிர்மானம், வீதி அபிவிருத்தி, பாடாசாலை அபிவிருத்தி மற்றும் பாலம் அமைத்தல் போன்றவையும், சாய்ந்தமருது பிரதேச மையவாடி, மீனவர்களின் பிரச்சினைகள், மாவடிப்பள்ளி பாடசாலை அபிவிருத்தி மற்றும் விவசாயிகளின் பிரச்சனைக்கான தீர்வுகள், சம்மாந்துறை பஸ் டிப்போவை மீண்டும் செயற்படுத்தல், அட்டாளைச்சேனை வீதிகள் மற்றும் வடிகால்கள் அமைத்தல், நாவிதன்வெளி மையவாடி, பொது விளையாட்டு மைதானம் புணர்நிர்மானம் மற்றும் பெரிய நீலாவணை முஸ்லிம் பிரிவுக்கு நிரந்தர கிராம உத்தியோகத்தர் ஒருவரை நியமித்தல் போன்ற முன்மொளிவுகள் நாடாளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிரினால் முன்மொழியப்பட்டுள்ளது.
மேலும் கல்வி, சுகாதாரம், நீர்ப்பாசனம், விளையாட்டு, மீன்பிடி, நீர்வழங்கல், பாதை அபிவிருத்தி, காணி உறுதிப்பத்திரம் வழங்கல் என பல விடயங்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் முன்மொழிவுகள் ஆராயப்பட்டதுடன் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான தீர்மானங்கள் பலவும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அத்தோடு சிக்கலான விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து முடிவெடுப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த குழுக்கூட்டமானது அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவர்த்தனவின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றதுடன், பிரதி அமைச்சர் வசந்த பியத்திஸ்ஸ, கிழக்கு மாகாண ஆளுநர் ஜெயந்தலால் ரத்னசேகர உட்பட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
![Gallery](https://cdn.ibcstack.com/article/b3b9f8bc-aee4-498c-a378-7f655a7bec62/25-67ac445482c30.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/f72149b1-dd1c-4264-852b-bec8a103662b/25-67ac445516210.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/e1886614-1589-4380-8ee5-e717a8d4583e/25-67ac4455abdc9.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/e845c2ab-89a2-4237-b007-5303bebee87d/25-67ac4456409b7.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/0b646c71-05b0-47fc-8cbe-de4b8c1124e2/25-67ac4456b8744.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/f3ccd594-480c-42e2-b9e0-f5b6d7f5070f/25-67ac445756220.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/a9dbd86f-0e86-4dd9-bf3d-095003a83fc1/25-67ac4457edd2e.webp)