புதுமண தம்பதிகளுக்கு அரசாங்கம் வழங்கவுள்ள விசேட சலுகை

Government Of Sri Lanka Sri Lankan Peoples Economy of Sri Lanka
By Sajithra Feb 11, 2025 09:30 AM GMT
Sajithra

Sajithra

இலங்கையில் புதிதாக திருமணம் செய்து கொண்ட தம்பதிகளுக்காக அரசாங்கம் ஒரு புதிய சலுகையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. 

இதன்படி, புதுமண தம்பதிகளுக்கு வீடு கட்ட கடன் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக நகர்ப்புற மேம்பாடு, கட்டுமானம் மற்றும் வீட்டுவசதி மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இந்த வீட்டுத்திட்டம் ஒரு முன்னோடி திட்டமாக ஆரம்பிக்கப்படவுள்ளதாக நகர்ப்புற மேம்பாடு, கட்டுமானம் மற்றும் வீட்டுவசதி மேம்பாட்டு அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன குறிப்பிட்டுள்ளார்.

வாகன இறக்குமதி தொடர்பில் புதிய சிக்கல்

வாகன இறக்குமதி தொடர்பில் புதிய சிக்கல்

திருப்பி செலுத்துதல்... 

மேலும், ஒரு தம்பதியிக்கு வீடு கட்டுவதற்கு எவ்வளவு தொகை வழங்க வேண்டும் என்பது குறித்து இது வரை தீர்மானம் எடுக்கப்படவில்லை என்று ரஞ்சித் ஆரியரத்ன கூறியுள்ளார்.

புதுமண தம்பதிகளுக்கு அரசாங்கம் வழங்கவுள்ள விசேட சலுகை | Housing Loan For Newly Married People In Sri Lanka

அத்துடன், அந்த வீட்டுக் கடன்கள் வேலையில்லாதவர்கள் என்ற அடிப்படையில் வழங்கப்படவுள்ளதாகவும் அதற்கான கடன் தொகை அரச வங்கிகளால் வழங்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

அதேவேளை, கடன் தொகையை திருப்பிச் செலுத்தக்கூடிய நிலைமையில் உள்ளவர்களுக்கு இந்த கடன் வழங்கப்படும் திட்டம் பொருந்தும் என்றும் ரஞ்சித் ஆரியரத்ன குறிப்பிட்டுள்ளார். 

மின்வெட்டு நேரம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

மின்வெட்டு நேரம் தொடர்பில் வெளியான அறிவிப்பு