அம்பாறை மாவட்ட கலாசாரம் மாற்றமடைய வேண்டும்: சந்திரநேரு சந்திரகாந்தன் ஆதங்கம்

Ampara Eastern Province General Election 2024
By Laksi Oct 09, 2024 11:31 AM GMT
Laksi

Laksi

அம்பாறை மாவட்டத்தை 'வெத்திலை பெட்டியாக' பாவிக்கும் கலாசாரம் இந்த தேர்தலோடு மாற்றமடைய வேண்டும் அல்லது மாறவேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும் என அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்ட தமிழ் பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்வது தொடர்பில் இன்று (9) தனது முகப்புத்தகம் வாயிலாக இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அதில் குறிப்பிட்டுள்ளதாவது, அம்பாறை மாவட்டம் முழுதும் கடந்த சில தினங்களாக சில பயணங்களையும் பல நண்பர்களையும் பயணங்கள் வழியே சந்திக்க நேர்ந்தது.அதுனூடாக பெற்ற செய்திகளின் அடிப்படையில் சில தகவல்களை உங்களுடன் பகிர்கின்றேன்.

வாகன இறக்குமதி தொடர்பில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட அறிவிப்பு

வாகன இறக்குமதி தொடர்பில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட அறிவிப்பு

பெண் வேட்பாளர்கள்

பொது தேர்தலுக்காக பல கட்சிகளும் சுயேட்சைகளும் அம்பாறைக்குள் களமிறக்கப்பட்ட நிலையில் அந்தந்த கட்சிகளுக்காகவும் சுயேட்சைகளுக்காகவும் களமிறக்க ஆள் பிடிக்கும் படலமும் தேடுதல்களும் பரவலாக இடம்பெற்று வருகின்றது.

அம்பாறை மாவட்ட கலாசாரம் மாற்றமடைய வேண்டும்: சந்திரநேரு சந்திரகாந்தன் ஆதங்கம் | Ampara Culture Should Change With This Election

அம்பாறையில் தமிழர்களுக்கென்று ஒரு ஆசனம் இலவு காத்த கிளியாக காத்திருக்கும் வேளையில் அம்பாறை தமிழ் மக்களின் இருப்பை தக்கவைக்கும் வேலைத்திட்டத்தில் ஒரே சின்னத்தின் கீழ் கொண்டு வருவதற்கான அடிமட்ட எத்தனிப்புகளை பல்வேறு மட்ட சமூக அமைப்புக்கள் செய்தும் அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின் கேள்விக்குறியாக போய் நிற்கின்ற இருப்பையும் அவர்களின் எதிர்பார்ப்புகளையும் உணர்வுகளையும் நாடி பிடித்து அறிந்திருந்தும் தங்களது சுயநலன்களுக்காக களத்தில் இறங்கியிருக்கும் நிலையை பார்க்கின்றபோது உண்மையில் பரிதாபமும் கோபமுமே வருகின்றது.

பெண்களின் வாக்குரிமை 52 வீதமாக தேர்தலில் வெற்றியாளர்களை தீர்மானிக்கும் சக்தியாக பெண்கள் இருந்தும் கட்சிக்காக உழைத்த பெண் வேட்பாளர்கள் சம அளவில் எந்த கட்சிகளுக்குள்ளும் உள்வாங்கப்படாததும் ஆளுமையான தலைமைத்துவமுள்ள இளைஞர்கள் இனங்காணப்படாததும் உண்மையில் வேதனை.

பொதுத் தேர்தல் : வடக்கு, கிழக்கில் அதிக சுயேட்சைக் குழுக்கள் போட்டி

பொதுத் தேர்தல் : வடக்கு, கிழக்கில் அதிக சுயேட்சைக் குழுக்கள் போட்டி

அம்பாறை மாவட்ட கலாசாரம்

வெறுமனே பொதுவெளியில் சமூக அமைப்புகளாக தங்களை வெளிகாட்ட முனையும் பொது அமைப்புக்கள் தங்களுக்குள் பொதுவெளியில் ஒரு கொள்கையும் மறுபுறத்தே தமது கட்சி விசுவாசிகளுக்காக ஒரு கொள்கையும் வைத்து பொதுவெளியில் மக்களை ஏமாற்றி குடைபிடிப்பதுடன் வீட்டிக்குள் இருந்து செய்தி எழுதும் ஊடகவியலாளர்கள் அவர்களுக்கு ஞால்ரா அடிப்பதும் வெட்கப்பட வேண்டிய விடயமாகும்.

அம்பாறை மாவட்ட கலாசாரம் மாற்றமடைய வேண்டும்: சந்திரநேரு சந்திரகாந்தன் ஆதங்கம் | Ampara Culture Should Change With This Election

எனவே ஐந்துக்கும் பத்துக்கும் ஆசைப்பட்டு அம்பாறை மாவட்ட தமிழர்களின் பிரதிநிதித்துவத்தையும் அவர்களது இருப்பையும் கேள்விக்குறியாக்கியிருப்பதுடன் பிரதிநிதித்துவ சந்தர்ப்பம் இல்லாமல் போகும் பட்சத்தில் தேர்தலில் குதித்த பல்வேறு தரப்பினரும் இதற்கான தீர்வு என்ன என்பதை மக்களுக்கு உறுதிமொழியாக உங்களது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வழங்குவதும் கட்டாயமானதாகும்.

ஏனெனில் அம்பாறை மாவட்டத்தை 'வே....வெத்திலை பெட்டியாக' பாவிக்கும் கலாசாரம் இந்த தேர்தலோடு மாற்றமடைய வேண்டும் அல்லது மாறவேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும்.என்றார்.

கேக் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

கேக் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
GalleryGallery